பாடகர் அந்தோணி தாசன் வீட்டில் நடந்த மகிழ்ச்சியான செய்தி… வைரலாகும்  புகைப்படங்கள்… 

2007 ஆம் ஆண்டு வெளியான திண்டுக்கல் சாரதி படத்தில் ‘திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’ என்ற பாடலை எழுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார் அந்தோணி தாசன்.இவர் தஞ்சை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர்  இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட காரணத்தினால் நாட்டுப்புறப்  பாடகராக உருவெடுத்தார்.

   

அதன் பின் அங்கிருந்து சினிமாவுக்கு வரவேண்டும் என்று குறிக்கோளுடன் கடுமையாக உழைத்தார்.இதன்  பலனாக  ‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்து. அதை தொடர்ந்து  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தில் காசு பணம் துட்டு மணிசில வரிகளை பாடி பட்டையை கிளப்பினார்.

அதைத் தொடர்ந்து  தமிழில் முண்டாசுப்பட்டி,  காக்க காக்க,  வருத்தப்படாத வாலிபர் சங்கம்,  பாண்டியநாடு,  ஜிகர்தண்டா, கப்பல்,  காக்கிச்சட்டை,  144,  ஒரு நாள் கூத்து,   போன்ற பல படங்களில்  பாடல்களை எழுதியுள்ளார்.

சமீபத்தில் வெளியான வாத்தி, சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், நாடு போன்ற படங்களில் இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.இவரது குரலுக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் பாடிய பல பாடல்கள் பெறும் வரவேற்பு மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டது.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு தனது சமையல் திறமையை  வெளிப்படுத்தினார்.  இந்நிலையில் இவரது மகள்  கல்லூரி படிப்பினை முடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் குடும்பத்தில் முதல் முதலாக இவரின் மகள் கல்லூரி படிப்பினை முடித்துள்ளார்.இதனால் பெரும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.