குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி இந்த பிரபலம் இல்லையா? என்ன காரணம்? யாருனு பாருங்க!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சி மட்டுமே மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. பிரபலங்களை வைத்து 100 நாள் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடையே நிறைய வரவேற்ப்பை பெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து காமெடியும் இருப்பதால் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது.

அதற்கு மிகவும் முக்கியமான காரணம் கோமாளிகளாக வரும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் தான். மிகவும் ரகளையான இந்த நிகழ்ச்சி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனுக்கும் நல்ல வரவேற்பு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமையல் நிகழ்ச்சி என்றாலும் காமெடிகள் அதிகம் நிறைந்ததாக உள்ளது. கொடுக்கும் நேரத்தில் வித்தியாசமாக போட்டியாளர்களும் சமைத்துக்காட்டி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக இருப்பவர் பவித்ரா. இவரை சில எபிசோடில் காணவில்லை, எனவே ரசிகர்கள் அவர் இனி வர மாட்டாரே என கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் உண்மையில் சில சொந்த காரணங்களால் தான் அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லையாம். விரைவில் புதிய நிகழ்ச்சியில் வருவேன் என அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.