யாரும் இதை நம்பவேண்டாம்! திடீரென வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களை மிகவும் பிரபலம். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் படு பிரபலம். அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக ஒளிபரப்பபட்டு வருகிறது. இதில் மிகவும் முக்கியமான கதிர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகர் குமரன். இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட நடிகர் குமரன் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்த சீரியலை தாண்டி வேறு எதிலும் குமாரனை பார்க்க முடியாது. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் பற்றிய பேச்சு தான் அதிகம். சித்ரா மறைந்ததில் இருந்தே இந்த சீரியல் பற்றிய தகவல்களும் நிறைய வெளியாக ஆரம்பித்துவிட்டன. குமரன் எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருப்பார்.

வீடியோக்கள் அதிகம் வெளியிடுவார், ரசிகர்களும் அதை ரசிப்பார்கள்.இப்போது கதிர் பெயரில் நிறைய போலியான பேஸ்புக் கணக்குகள் உள்ளதாம், அதில் இருந்து மெசேஜ் செல்கிறதாம். இதனால் பலரும் அது நீங்களா என கேட்டிகிறார்கள், ஆனால் இன்ஸ்டா பக்கத்தில் மட்டுமே தான் உள்ளேன். யாரும் போலி கணக்குகளை நம்ப வேண்டாம் என திடீரென வீடியோ வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.