கோயில் தூண் மீது சுழலும் கல்.. இப்படியொரு அதிசயத்தை பாத்திருக்க மாட்டீங்க..!! அந்த காலத்துலே இப்படி ஒரு விஞ்ஞானியா.? வைரல் வீடியோ

இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் நாம் பெரிய, பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியான எதுவ்மே இல்லாமல் அன்றைய காலத்திலேயே நம் முன்னோர்கள் பெரிய அதிசயங்களைச் செய்துள்ளனர்.

அந்த வரிசையில் இதோ இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்து கோயில்களைச் சுற்றி ஏராளமான அதிசயங்கள் இருக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பாதாள அறையைத் திறந்த போது கட்டுக், கட்டாக இருந்த தங்கமும், வைரமும் இதற்குச் சாட்சி.

இதேபோல் பல கோயில்களிலும் விக்கிரகங்கள் தொடங்கி பலவற்றிலும் பல ஆச்சர்யங்கள் இருக்கிறது. அந்த வகையில் இப்போது பெங்களூர் ரங்கநாத சுவாமி கோயிலில் ஒரு அதிசயம் நடந்துள்ளது.

அங்கிருக்கும் கல்தூணில் சுழலும் கல் சக்கரம் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காலத்திலேயே இந்த சிற்பி கல்பேரிங் கண்டுபிடிச்ச விஞ்ஞானியா இருந்துருக்காரே என சோசியல் மீடியாக்களில் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.