தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா…காரில் சென்றவர்களை வெறுப்பேற்றிய முதியவர்.. வைரல் வீடியோ

அப்பா எப்படி ஒவ்வொருவருக்கும் முதல் ஹீரோவோ, அதேபோலத்தான் தாத்தா, பாட்டியும்! அப்பா, அம்மாவிடம் நாம் வாங்கிக்கேட்டு கிடைக்காத பொருள்கள் கூட தாத்தா, பாட்டியிடம் இருந்து கிடைத்துவிடும். தாத்தாவும், பாட்டியும் ‘பேரப்பிள்ளே’ என கூப்பிடும் அழகே தனிதான்!.

இன்றெல்லாம் பலருக்கும் தாத்தா, பாட்டியின் அருமையும், அவர்களோடு இருக்கும் சந்தோசமான தருணமும் தெரிவதே இல்லை. உண்மையில் அவர்கள் பக்கத்தில் இருக்கும் நாள்களை சொர்க்கம் என்றே சொல்லிவிடலாம்.

அந்தவகையில் தாத்தாக்கள் எப்போதுமே ரொம்பவும் ஸ்பெசல் தான். அந்தவகையில் இங்கேயும் ஒரு தாத்தா இருக்கிறார். அவர் உலகை ரொம்பவும் ரசித்து வாழ்பவரும் கூட! ஒருநாள் வழக்கம்போல் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது அருகிலேயே ஒரு கார் வந்தது. உடனே அந்தக்காரோடு போட்டி, போட்டுக்கொண்டு சைக்கிளை ஏறி நின்று ஸ்பீடாக மிதிக்கத் தொடங்கினார். ஒருகட்டத்தில் காரையே முந்தியவர்,

தன் இருகைகளையும் விட்டு விட்டு செம ஸ்டைலாக காரை ஓட்டத் துவங்கினார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். சொகுசு காரில் போறவரை விட இந்த தாத்தா எவ்வளவு நிம்மதியாக இருக்கிறார் பாருங்கள். இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published.