இந்த விடியோவை பார்த்தா 90 ‘ஸ் கிட்ஸ் வாழ்க்கை எவ்ளோ அருமையானது புரியும்..!! உங்களுக்கும் இப்படி நடந்திருக்கா..?

முன்பெல்லாம் குழந்தைகள் தெருவே கதி என கிடப்பார்கள். சதா சர்வநேரமும் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகளைத் தேடியும் நண்பர்கள் அந்த காலத்தில் படையெடுத்து வருவது வழக்கம். ஆனால் இன்று நிலமை அப்படி இல்லை

குழந்தைகள் தெருவில் போய் விளையாடுவதே இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது. வீட்டில் சதா சர்வநேரமும் செல்போனில் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதிலும் தங்கள் வீட்டுக்குள் இருந்தே இப்போது செல்போனில் அவர், அவர் வீட்டில் இருந்து விளையாடும் விளையாட்டுக்கள் எல்லாம் வந்துவிட்டன. இப்படியான சூழலில் நம் பழைய கால வாழ்க்கையெல்லாம் ஒரு கனவைப் போல் மாறிவிட்டது.

வெயில் படத்தில் வரும் வெயிலோடு விளையாடி…வெயிலோடு உறவாடி பாடலைப் போல் அப்போது குழந்தைகள் தெருவே கதியென கிடப்பார்கள். ஒன்றாக சேர்ந்து கூட்டாஞ்சோறு பொங்கி விளையாடிய அந்தப் பொழுதுகள் ரசனைக்குரியவை.

அந்தவகையில் முன்பெல்லாம் தெருவே கதி எனக் கிடக்கும் குழந்தைகளை அம்மா வீட்டில் இருக்கும் கம்பைத் தூக்கிக் கொண்டு அடிக்கப் பாய்வது பயந்து ஓடினாலும் 90 ஸ்கிட்ஸ் வாழ்வில் இரண்டறக் கலந்தது. இந்தத் தலைமுறை இதையெல்லாம் அனுபவித்ததே இல்லை. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by panneer (@daily.viral.tamil)

Leave a Reply

Your email address will not be published.