நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மகள், மருமகளுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம் இதோ!!

தமிழ் சினிமாவில் நடிப்பதும் படங்களை இயக்குவது போன்ற இரண்டு துறைகளிலும் வல்லமை பெற்றவர் பாக்யராஜ் அவர்கள். இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 80களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். இவர் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார். இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமா தம்பதியருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற ஒரு மகனும் உள்ளனர்.

சாந்தனு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இதேவேளை, சாந்தனு படங்கள் நடித்து வந்தாலும் சரியாக அங்கீகரிக்கப்படும் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அண்மையில் அவர் நடித்த தங்கம் வெப் சீரியஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது நடிப்புக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. இவரின் மகள் நடிகர் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் படங்களில் அவர் நடிக்கவில்லை. நடிகை பூர்ணிமா அவர்கள் சீரியல்கள் சில நடித்துவந்த அவர் சொந்தமாக தொழில்கள் தொடங்கி அதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பூர்ணிமா பாக்யராஜ் தனது மகள் மற்றும் மருமகளுடன் ஒரு அழகிய புகைப்படம் எடுத்துள்ளார். இதோ அவரது அழகிய குடும்பத்தின் புகைப்படம்,

Leave a Reply

Your email address will not be published.