மயிலின் முட்டையை எடுத்த நபர்..!! நொடிப்பொழுதில் மற்றொரு மயில் செய்த தரமான சம்பவம்… திருடிய நபருக்கு கிடைத்த தண்டனை..!! வைரல் வீடியோ

விலங்குகளிடமும் பறவைகளிடமும் நாம் அன்பாக பழகினால், அவையும் நம்முடன் அன்பாக பழகும். ஆனால், அவற்றுடன் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், அவையும் நம்மை ஒரு கை பார்க்கத்தான் செய்யும்.

சமூக ஊடகங்களில் பல வீடியோக்களில் இதுபோன்ற காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது இதுபோன்று மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில், ஒரு ஆண் மயிலும் பெண் மயிலும் இருப்பதைக் காண முடிகின்றது. அப்போது அங்கு ஒரு நபர் வருகிறார். அவர் மயிலின் முட்டைகளை எடுக்க முயற்சிக்கிறார்.

பெண் மயிலின் அருகில் உள்ள முட்டைகளை அந்த நபர் எடுக்க முயற்சிக்கையில், ஆண் மயில் பறந்துவந்து அந்த நபரைத் தாக்குகிறது. மயிலின் திடீர் தாக்குதலால் அந்த நபர் ஆடிபோய் அங்கேயே விழுந்துவிடுகிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.