கள்ளம் கபடம் இல்லாமல் ஆங்கிலத்தில் சரமாரியாக பேசி ஆச்சரியப்படுத்திய வைத்த நரிக்குறவ பெண்… சான்ஸே இல்லை… வைரல் காணொளி

ஆங்கிலம் என்பது மொழி தானே தவிர அதுவே அறிவு கிடையாது. அதனால் ஆங்கிலம் தெரியாதவர்களை முட்டாள் எனக் குறைத்து மதிப்பிடுவது மிகவும் ஆபத்தானது. தவறானது. அதேபோல் நன்கு டிப் டாப் உடையில் இருப்பவர்களுக்குத் தான் ஆங்கிலம் தெரியும் என்னும் புரிதலும் தவறானது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சுற்றுலாத்தலம் ஒன்றில் ஊசி, பாசி விற்றுக்கொண்டு நாடோடி பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரே சொந்தமாகத் தயாரித்த ஒரு பாசியை 80 ரூபாய் என அவர் விற்றுக் கொண்டிருந்தார். அவருக்குள் மிக அற்புதமான ஆங்கிலத் திறமை இருப்பதை அறிந்த வாடிக்கையாளர் ஒருவர் அதை செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

நாடோடி பெண் என்பதால் அவருக்கு மிகவும் சீக்கிரத்திலேயே திருமணமும் ஆகிவிட்டது. அவர் கையில் கைக்குழந்தையும் இருக்கிறது. அந்த பெண் சரளமாக ஆங்கிலம் பேசும் நுட்பம் அனைவரையும் அசரவைத்துள்ளது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *