அச்சு அசல் நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண்.. ஷாக்கில் ரசிகர்கள்! புகைப்படம் இதோ

தமிழ் திரையுலகில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்றே ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது என்றே கூறலாம். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாகவும், தேசிய விருது வென்ற நடிகையாகவும் விளங்குகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா என்ற திரைப்படம் பிரபல OTT தளத்தில் வெளியானது, ஆனால் அப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. மேலும் தமிழில் சாணி காயிதம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் செம பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி.

இந்நிலையில் பிரபல நடிகர்கள் மட்டும் நடிகைகள் போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருவதை பார்த்துளோம். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் ஒரு பெண் டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமாகியுள்ளார். இதோ அவரின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.