நடிகை நதியாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? அம்மா போலவே இருக்கிறாரே! முதன்முறையாக வெளியான புகைப்படம்

80களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வான்ஹவர் நடிகை நதியா. தமிழ் சினிமாவில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து கலக்கியவர்.

நடிகை நதியா 1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். இவருக்கு இரண்டு அழகான பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சினிமாவில் அக்கா, அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகை நதியா மும்பையில் 1966ஆம் ஆண்டு பிறந்தவர். நடிகை நதியாவின் கணவர் மற்றும் பிள்ளைகளின் புகைப்படங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் இதுவரை நடிகை நதியாவின் அம்மாவின் புகைப்படத்தை பார்த்ததில்லை. இந்நிலையில் முதல் முறையாக நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.