சிவா மனசுல சக்தி சீரியல் நாயகியா இது? தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று. ரசிகர்களுக்கு ஏற்றார் போல் விதவிதமாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், குக் வித கோமாளி, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் என கூறி கொண்டே இருக்கலாம்.

லாக் டவுன் முன்பு ஏகப்பட்ட விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் டாப்பில் ஓடின. ஆனால் கொரோனா பிரச்சனையால் பல சீரியல்கள் அப்படியே நிறுத்தப்பட்டது, சில அதே பெயரில் வேறொரு கதையில் ஓடுகின்றன. லாக் டவுன் முடிந்த பிறகு விஜய் தொலைக்காட்சியில் சில புதிய சீரியல்கள் தொடங்கின. வேலைக்காரன், காற்றுக்கென்ன வேலி, பாக்கியலட்சுமி என புதுபுது சீரியல் வந்தன.

அப்படியே பாதியில் நிறுத்தப்பட்ட சீரியல்களில் ஒன்று சிவா மனசுல ஷக்தி. சீரியல் நன்றாக தான் ஓடிக் கொண்டிருந்தது, அதில் நடித்த நாயகன்-நாயகிக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். இதில் நடித்த சிலர் வேறொரு சீரியல்களில் கமிட்டாகிவிட்டனர். ஆனால் நாயகியாக நடித்த தனுஜா மட்டும் இன்னும் எதிலும் கமிட்டாகவில்லை. இந்த நிலையில் தான் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்கள்,

 

 

View this post on Instagram

 

A post shared by Thanuja (@thanuja_puttaswamy_)

Leave a Reply

Your email address will not be published.