“நமக்கு இப்படி ஒரு காதலி இல்லையே..” காதலின் செயலால் நெகுழ்ச்சியடைந்த காதலன்.. கண்ணீர் கடலில் மூழ்கிய தருணம்

நீண்ட நாட்கள் ஒருவர் ஆசைப்பட்டு வாங்க முடியாமல் இருக்கும் பொருளை அவருக்காக வாங்கிக் கொடுத்து, அவர்களை பேச்சு மூச்சு இல்லாமல், ஆச்சரியத்தில் உறைய வைத்து அழகு பார்ப்பார்கள் சிலர். அந்த வகையில், ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி, நெட்டிசன்கள் மனதையும் ஒரு நிமிடம் உருக வைத்துள்ளது.

தன்னுடைய காதலனின் ஃபேவரைட் பைக்காக, Duke இருந்துள்ளது. இது பற்றி நன்கு அறிந்த அந்த காதலி, காதலனை சர்ப்ரைஸாக ஷோ ரூம் அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து, அங்கு வைத்து காதலனின் பைக்கை காட்டி, உன்னுடையது தான் எனக்கூற, என்ன செய்வதென்று தெரியாமல் வியப்பில் ஆழ்ந்து போயுள்ளார் அந்த இளைஞர்.

காதலியின் அன்பு பரிசைக் கண்டு இளைஞர் ஆனந்த கண்ணீர் வடிக்கவே, அதனைத் துடைத்து ஆறுதல் கூறி தேற்றி உள்ளார் காதலி. இதனையடுத்து,

அந்த இளைஞரும் காதலியை கட்டியணைத்து நன்றியைக் கூற, இந்த வீடியோவை பார்ப்பவர்களும், நமக்கு இப்படி சர்ப்ரைஸ் செய்ய ஒரு காதலி இல்லையே என நிச்சயம் ஏங்கி போய் இருப்பார்கள்.

தொடர்ந்து, பைக்கின் மீது அமர்ந்து இளைஞர் ஒத்திகை பார்க்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த காதலியின் செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *