பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணனின் தங்கையை பார்த்துள்ளீர்களா? இவ்வளவு அழகா! வாயடைத்துப்போன ரசிகர்கள்

விஜய் தொலைகாட்சித்தியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான மெகா சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடருக்கென்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ஓர் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக ஒளிபரப்பபட்டு வருகிறது. இத்தொடரில் வரும் முல்லை, கதிர், தனம், மீனா, கண்ணன் என பல கதாபாத்திரங்கள் உள்ளது. இந்த அணைத்து கதாபாத்திரங்களும் பிரபலம்.

இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர். அதிலும் முல்லை கதிர் கதாபாத்திரத்திற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. சமீபத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவிற்கு பிறகு, இந்த முல்லை என்னும் கதாபாத்திரத்தில் இளம் சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார்.

இத்தொடரில் நகைச்சுவையால் நம்மை மகிழ வைத்து வருபவர் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சரவணன். இந்நிலையில் நடிகர் சரவணன், தனது தங்கையுடன் இணைந்து சமீபத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். ஆம் முதல் முறையாக நடிகர் கண்ணன் தங்கையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.