முன்னணி நடிகை அனுஷ்காவின் அண்ணன்களை பார்த்துள்ளீர்களா? இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நடிகை அனுஷ்கா. தமிழில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இரண்டு திரைப்படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பை தரவில்லை. இதனால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் அருந்ததி திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார். இதனை அடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் அனுஷ்கா.

இதனிடையே இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படம் இந்திய அளவில் பெரும் சாதனை படைத்து இவருக்கும் வெற்றியை தேடித்தந்தது. ஆனால் இவர் நடித்த இஞ்சி இடுப்பழகி எனும் படத்தில் இவர் தனது உடல் எடையை அதிகரித்தார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வர குறைய துவங்கியது. மேலும் இவர் நடிப்பில் கடைசியாக நிசப்தம் எனும் படம் வெளியானது. உடல் எடை அதிகரித்திருந்த அவர் யோகா, ஆயுர்வேத சிகிச்சை மூலம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உடல் எடையை குறைத்தார்.

மேலும், நடிகை அனுஷ்காவின் புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். இதனிடையே, சமீபகாலமாக நடிகை அனுஷ்காவுக்கு இருவர் முத்தமிடுவது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அவர்கள் நடிகை அனுஷ்காவின் அண்ணன்களாம். அவர்களில் ஒரு அண்ணனான குனரஞ்சன் ஷெட்டி அரசியலில் உள்ளாராம். மற்றொரு அண்ணனான சாய் ரமேஷ் ஷெட்டி காஸ்மெட்டிக் சர்ஜனாக இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published.