வனிதாவிற்கு போட்டியா? மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகள் தான் நடிகை ஸ்ரீதேவி. ரிக்‌ஷா மாமா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக ரிக்ஷாமாமா, அம்மா வந்தாச்சு, டேவிட் அங்கிள், தெய்வ குழந்தை, சுகமான சுமைகள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஹீரோயினியாக காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக ‘தித்திக்குதே’ படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘தேவதையை கண்டேன்’ திரைப்படம் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் இவருக்கென தனி ரசிகர்களை பெற்றார். இந்த நிலையில் அவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டதுடன், இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தினை கவனித்து கொண்டிருந்தார் நடிகை ஸ்ரீதேவி. தற்போது மீண்டும் டிவி நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியுள்ளார். ஆம் தெலுங்கு StarMaa தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Comedy Stars என்ற நிகழ்ச்சியின் நடுவராக ஸ்ரீதேவி களமிறங்கியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.