பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் மனைவி யாரு தெரியுமா? அவரும் ஒரு நடிகைதான்! புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்ப தலைவியின் கதையாக நகர்கிறது. இந்த தொடரின் கதையில் இல்லத்தரசி என்பவர் அம்மாவாக, மனைவியாக, மருமகளாக போன்ற பல பொறுப்புகளில் வகிக்கின்றார். ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு எந்த வரவேற்பும் இல்லை, ஆனால் போக போக மக்களின் ஆதரவை பெற்றது. சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள்.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூட சீரியல் பாக்கியலட்சுமி அனுபவிக்கும் அனைத்தும் தாங்களும் நிஜ வாழ்க்கையில் சந்திப்பதாகவும் அதனாலேயே இந்த சீரியல் பிடித்துபோக பார்ப்பதாகவும் கூறியிருந்தனர். கடந்த சில வாரங்களாக இந்த சீரியலுக்கான TRPயும் அதிகமாகி வருகிறது. ஏனெனில் மக்கள் எதிர்ப்பார்க்கும் திருப்பங்கள் சீரியலில் இடம்பெற்றுள்ளன. இந்த சீரியலில் ஒரு கடுப்பான குடும்ப தலைவராக நடிப்பவர் கோபி என்கிற சதீஷ்.

இவர் அண்மையில் இன்ஸ்டா பக்கம் வந்தார், அதில் இருந்து நிறைய படப்பிடிப்பு புகைப்படங்கள், தான் வாழ்க்கையில் செய்யும் விஷயங்கள் என பதிவுகளாக செய்து வருகிறார். அப்படி அண்மையில் அவரது மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு, அவரது பெயர் கீதா என்றும் மலையாள சினிமாவில் அவரும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார் என பதிவு செய்திருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@sathish_artist05)

Leave a Reply

Your email address will not be published.