மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ள நடிகர் தீபக்.. எந்த தொலைக்காட்சி சீரியலில் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் தீபக். 90களில் கலக்கிய பல கலைஞர்கள் இப்போதும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கின்றனர். அப்படி ஒரு பிரபலம் தான் தீபக். இவர் தொகுப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பல திறமைகளை வெளிக்காட்டி வெற்றிக்கொடி நாட்டியவர். 2006ம் ஆண்டு தென்றல் என்ற சீரியலில் நாயகனாக நடித்தார், அதன்பிறகு தீபக்கை சீரியல் பக்கம் காணவில்லை.

ஆனால் அவர் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார், சில நிகழ்ச்சிகளை தயாரித்தும் உள்ளார். அதுமட்டுமில்லாமல் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது தீபக் பல வருடங்களுக்கு பிறகு ஒரு விஷயம் செய்யவுள்ளார். அதாவது புதிதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் நாயகனாக நடிக்க இருக்கிறாராம்.

விஜய் டிவிக்கு வந்தால் தன்னுடைய ஹீரோ இமேஜ் இன்னும் உயரும் எனவும், சினிமாவில் மீண்டும் ஒரு வலம் வர உதவியாக இருக்கும் எனவும் விஜய் டிவியை தேர்ந்தெடுத்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் தெய்வமகள் சீரியல் புகழ் ரேகாவும் நடிக்கிறார். விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published.