நடிகை பிரியா பவானி சங்கரா இது? உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாய் இப்படி மாறிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் இளம் நாயகிகள் அதிகம் அங்கீகரிக்கப்பட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக அறிமுகமானவர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களை கவர்ந்தவர். அதன் பின்னர் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ் என பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலம் நடிகையாக காலடி பதித்தார். இதையடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகினார். மாஃபியா, மான்ஸ்டர், பொம்மை என போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது தொடர்ந்து வரிசையாக 10 படங்கள் கமிட்டாகி கோலிவுட்டில் மிகவும் பிசியாக வளம் வரும் கதாநாயகியாக மாறியுள்ளார்.

ஆம் இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், AV 33, பத்து தல உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிசியாக படங்கள் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர், உடல் எடை குறைந்த எலும்பும் தோலுமாய் மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் செம் ஷாக்காகியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.