யாரு பார்த்த வேலை இது!! கடும் வேதனையில் இருக்கும் குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் மாஸ்டர்.. என்ன நடந்தது தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சீசனை பொருத்தவரை ஒவ்வொரு போட்டியாளரும் ஒருவகையில் ஆச்சரியத்தை அளிக்கிறார்கள். ஷகிலா தொடங்கி இளம் நடிகரான அஸ்வின் வரை சமைத்து அசத்துகிறார்கள்.

அதிலும் திரைத்துறையில் பலரையும் ஆட்டுவித்த புகழ்பெற்ற நடன அமைப்பாளரான பாபா பாஸ்கர் இந்நிகழ்ச்சியில் செய்யும் ரகளை சமையல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் பாபா பாஸ்கர் மாஸ்டர் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஒருவர் எனக்கே தெரியாமல் ஹேக் செய்து விட்டனர். எனது ரசிகர்கள் பலரும் எனது குறை நிறைகளை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.

அதையெல்லாம் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் யாருக்கோ அது பிடிக்கவில்லை. அதனால் என்னுடைய இன்ஸ்டாகிராம் ஹேக் செய்து விட்டனர். எனக்கு அப்படி செய்தவர்களும் நன்றாக இருக்கட்டும். சீக்கிரமே திரும்பி வருவது பற்றி உங்களுக்கு பதிவிடுவேன்” என்று கூறியுள்ளார். இது யாரு பார்த்த வேலைடா என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.