சமீபத்தில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ எபிசோட் குறித்து எமோஷனல் ஆன பிரபல இயக்குனர்…. வெளியிட்ட டிவிட்டர் பதிவு….

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி ‘நீயா நானா’. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேல் ஒளி பரப்பப்பட்டு வருகிறது. பல்வேறு தலைப்புகளை கொண்டு வெளியிடப்படும் இந்த நிகழ்ச்சியின் கடந்த வார தலைப்பு ‘கணவனை விட அதிகமா சம்பாதிக்கும் மனைவிமார்கள்’.

இந்த தலைப்பில் நடத்தப்பட்ட நீயா நானாவில் பங்கேற்ற ஒரு தந்தையை பற்றியது இத்தொகுப்பு. சீனிராஜா என்பவர் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்த போது குடும்பத்தில் உள்ள யாருமே அவரை மதிக்கவில்லை. மனைவி முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரை ஏளனமாக பேசி உள்ளனர். படிப்பறிவு இல்லாதவர் என்று மனைவியே அவரை கிண்டலடித்து பேச தொகுப்பாளர் கோபிநாத் மிகுந்த கோபம் அடைந்தார்.

அப்போது அங்கு வந்த சீனி ராஜா மகள் என் அப்பா தோக்கல என்று சொல்லி மகள் அப்பாவை ஜெயிக்க வைத்தார். இந்த நிகழ்ச்சி அங்கிருந்தோர் கண்களை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த எபிசோடை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் நீயா நானாவின் ப்ரோமோவை ஷேர் செய்து கமெண்ட் செய்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று’ என்று கவிஞர் நா. முத்துக்குமார் எழுதிய கவிதை வரிகளை பதிவிட்டு அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *