‘எதிர்நீச்சல்’ நந்தினி ‘மல்லிப்பூ’ பாடல் ரீல்ஸ்…. என்னம்மா டான்ஸ் ஆடி இருக்காங்க நீங்களே பாருங்க…..

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ நாடகத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஹரிப்பிரியா இசை’ வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் வரும் மல்லி பூ பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் நடிகர் சிம்பு நடித்து அண்மையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.இப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், நல்ல வசூலையும் வாரி குவித்து வருகிறது. இவர்களின் வெற்றிக் கூட்டணி இது மூன்றாவது தடவை.

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இசைபுயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை என்றும் கூறலாம். இப்படத்தில் ‘மல்லி பூ’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி ஹிட்டாகி வருகிறது. இப்பாடலுக்கு சினிமா நட்சத்திரங்கள்,திரைபிரபலங்கள் மற்றும் சாதாரண மக்கள் என அனைவரும் ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் ‘எதிர்நீச்சல் சீரியலில்’ நந்தினி கதாபாத்திரத்தில் ஹரிப்பிரியா இசை என்பவர் நடித்து வருகிறார். இவர் தனது இயல்பான நடிப்பால் மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். தற்பொழுது இந்த மல்லிப்பூ பாடலுக்கு அவர் ஆடிய ரீல்ஸ்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. என்னம்மா டான்ஸ் ஆடுறாங்க நீங்களே பாருங்க…..

Leave a Reply

Your email address will not be published.