துபாயில் களை கட்டிய இயக்குனர் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் கொண்டாட்டம்…. துள்ளிக்குதித்த நயன்தாரா வைரலாகும் வீடியோ உள்ளே…..

நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர்.லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவுடன் தனது எட்டாவது பிறந்த நாளை கொண்டாடுவதாக கூறி இயக்குனர் விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் கனெக்ட், கோல்ட், காட் பாதர் ,ஜவான் போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9 அன்று மகாபலிபுரத்தில்  திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி துபாயில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

குறிப்பாக துபாயில் புர்ஜ்  கலிபா கட்டிடத்தில் முன் அவர் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தற்பொழுது பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நடிகை நயன்தாரா மிகவும் சந்தோஷமாக துள்ளிக் குதித்தவாறு  காணப்படுகிறார். தற்பொழுது இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published.