பாடகி மஹதி இப்ப எப்படி இருக்காங்கனு தெரியுமா?..உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா?…ஆச்சரியத்தில் ரசிகர்கள் …வைரலாகும் வீடியோ ……

80 – 90 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் பாடகி மஹதி. இவர் தன்னுடைய மகனுடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இசையுலகில் 80 – 90களில் கொடி கட்டி பறந்தவர் பாடகி மஹதி. அவருடைய பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் ஹிட் தான். இன்றும் ரசிகர்களால் அதிகம் விரும்பி கேட்கப்படுகிறது. அந்த வகையில் அற்புதமான பாடல்களை பாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகி மஹதி.

இவர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’ படத்தில் ‘அய்யய்யோ அய்யய்யோ’ என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில்  பிரபலமானார். இவர் ஒரு கர்நாடக இசை கலைஞர் ஆவார். 2007 ஆம் ஆண்டு சிறந்த பாடகிக்கான தமிழக அரசு விருதினை  பெற்றார். இவர் பாடுவதோடு மட்டுமல்லாமல், இசை கச்சேரிகளிலும் பங்கேற்றுள்ளார்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கு பெற்றிருக்கிறார். இவர் 2008 ஆம் ஆண்டு ஸ்ரீகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இதுவரை அவருடைய மகனுடைய புகைப்படம் வெளியிடப்படாத நிலையில், தற்போது பாடகி மஹதி தன் மகனுடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி  வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mahathi S (@singermahathi)

 

Leave a Reply

Your email address will not be published.