‘யசோதா’ படத்துக்கு நடிகை சமந்தா வாங்கிய சம்பளத்தை கேட்டீங்கன்னா அசந்து போயிடுவீங்க…. இத்தனை கோடியா?… அதிர்ச்சியில் திரையுலகம்…

நடிகை சமந்தா ‘யசோதா’ திரைப்படத்திற்காக கோடிகளில் வாங்கிய சம்பளம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தா தெலுங்கில் ‘யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.தன்னுடைய தனிச்சிறப்பு மிக்க நடிப்பால் இவர் இந்திய அளவில் சிறந்த நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார். ஸ்ரீதேவி மூவி சார்பில் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார்.

ஹரி ஹரிஷ் என்கிற இரட்டையர்கள் இப்படத்தை  இயக்கி வருகின்றனர். இப்படத்தில் சமந்தா உடன், வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் நடிகை சமந்தா கர்ப்பிணி பெண்ணாக நடிக்கிறார்.  இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு நடிகை சமந்தா  ரூபாய் 2.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் தற்பொழுது நடித்து வரும் படங்களுக்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளமாக கேட்கிறாராம்.  தற்பொழுது இவரது சம்பளம் பற்றி கேள்விப்பட்ட திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *