‘உங்க அலப்பறை தாங்க முடியலப்பா’….முதல் மாத திருமண நாளை கொண்டாடிய ரவீந்தர் மஹாலக்ஷ்மி தம்பதியினர்… வைரலாகும் புகைப்படம் உள்ளே….

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி தங்களது முதல் மாத திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

லிப்ரா பிரோடுக்ஷன்ஸ் உரிமையாளரான ரவீந்தர் மற்றும் பிரபல சீரியல் நடிகையான மஹாலக்ஷ்மி திருமணம் நாம் அறிந்த ஒன்றே. கடந்த மாதம் செப்டம்பர் 1 ல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து முதல் மாத திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

திருமணம் முடிந்த கையோடு பேட்டி கொடுக்க ஆரம்பித்தவர்கள் தற்பொழுது வரையிலும் பேட்டி கொடுத்துக் கொண்டே உள்ளார்கள். சிலர் இவர்களை வாழ்த்த, ஒரு சிலர் இவர்களை ஏளனம் செய்ய எதையும் கண்டு கொள்ளாமல் தங்களுடைய வாழ்க்கையை மிகச்சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் இத்தம்பதியினர்.

தற்பொழுது ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் மாத திருமண நாளை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இது நம்முடைய முதல் மாத திருமண நாள் … மக்கள் நம்மை பார்த்து சிரிக்க 100 காரணங்கள் இருக்கலாம் … என் சந்தோஷத்திற்கு ஒரே காரணம் அது நீ மட்டும் தான்… லவ் யூ முயலு’… என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘உங்க அலப்பறை தாங்க முடியலப்பா’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *