“தல” என சொன்னதும் செம கடுப்பான விஜய் சேதுபதி…. மாணவர்கள் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வளம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சாந்தமாகவும், மற்றொரு பக்கம் “விக்ரம்” படத்தில் மிரட்டும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் செம்ம பிசியான நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான “மாமனிதன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் சேதுபதி கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிக் கொண்டிருக்கும்போது விஜய் சேதுபதி தல என்று சொன்னதும் மாணவர்கள் கூச்சலிட்ட நிலையில் அதற்கு கடுப்பாகி விஜய் சேதுபதி கத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *