தேர்வு கட்டணம் செலுத்த உதவி கேட்ட கல்லூரி மாணவி…ஜி வி பிரகாஷ் என்ன செய்தார் தெரியுமா உங்களுக்கு?…

கும்பகோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தேர்வு கட்டணம் செலுத்த தனக்கு உதவ வேண்டும் என ட்விட்டரில் கமெண்ட் செய்த  சில நிமிடங்களிலேயே அந்த மாணவிக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்  g pay மூலம் பணஉதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். அண்மையில் இவர் இசையமைத்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்  சூப்பர் ஹிட் அடித்தது. இதற்காக அவர் தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். கிரீடம், பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், அசுரன், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் இவர் இசையமைப்பில் வெளியான சில முக்கிய படங்கள்.

இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், ஜெயில், நாச்சியார் உள்ளிட்ட படங்களில் தோன்றியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் ஜி.வி.பிரகாஷ்.

தற்பொழுது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தேர்வு கட்டணம் செலுத்த தனக்கு உதவ வேண்டும் என ட்விட்டரில் கமெண்ட் செய்த  சில நிமிடங்களிலேயே அந்த மாணவிக்கு ஜி.வி.பிரகாஷ் குமார்  g pay மூலம் பணஉதவி செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் அவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *