நடுரோட்டுல உங்க அட்டகாசம் தாங்க முடியலையே…’நம்ம வீட்டு பொண்ணு’ மீனாட்சி அட்ராசிட்டி …வைரலாகும் வீடியோ உள்ளே…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் அஸ்வினி அனந்திதா நடுராத்திரியில் நடுரோட்டில் நின்று நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகிவுள்ளது.

எண்ணற்ற ஹிட் சீரியல்கள் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது விஜய் தொலைக்காட்சி. இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  பிரபலமான சீரியல்  “நம்ம வீட்டு பொண்ணு”. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் அஸ்வினி அனந்திதா.

காதலையும் குடும்ப ஒற்றுமையையும் மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. நடிகை அஸ்வினி அனந்திதா இந்த சீரியலில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடிய இவர் ,தற்பொழுது துபாயில் நடுரோட்டில் நின்று நடனம் ஆடும் வீடியோ ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘நடுரோட்டுல உங்க அட்டகாசம் தாங்க முடியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *