‘எதிர்நீச்சல்’ பட நடிகையின் பிரம்மாண்ட வீட்டை பாத்திருக்கீங்களா?…அழகான வீட்டின் அழகான புகைப்படங்கள் இதோ…

நடிகை நந்திதா கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படங்களில் நடித்து வருபவர் நடிகை நந்திதா. இவர்  ‘அட்டக்கத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து அவர் முண்டாசுப்பட்டி,ஈஸ்வரன்  உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், ரசிகர்களை அதிகம்  கவர்ந்தது. ‘எதிர் நீச்சல்’, ‘முண்டாசுப்பட்டி’ போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தில் ‘குமுதா’ எனும்  கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

நடிகை நந்திதாவின் நிஜ பெயர் ஸ்வேதா. அவர் முதலில் நடித்த கன்னட படத்தில் அவரது  கதாபாத்திரத்தின் பெயர் நந்திதா. அதுவே அவரது திரைப்பெயராகவும் மாறிவிட்டது. தற்பொழுது நடிகை நந்திதா தனது சொந்த ஊரான பெங்களுருவில் பிராரமாண்டமான ஒரு வீட்டை கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் அவரது உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை நந்திதா தற்பொழுது தனது பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *