சொக்க வைக்கும் தேவதையாக காட்சியளிக்கும் ஆலியா மானசா…அசத்தும் அழகில் வைரலாகும் வீடியோ உள்ளே…

நடிகை ஆலியா மானசா தனது பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை வெகுவாக குறைத்து தற்பொழுது அழகான தேவதை போன்று காட்சியளிக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் ‘செம்பா’ என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும், ‘கார்த்தி’ என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.

இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா, அர்ஸ் இரு குழந்தைகள் உள்ளனர். ஆல்யா மானசா ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.

இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தால் சீரியலை விட்டு விலகினார். தற்பொழுது மீண்டும் சீரியலில் நடிப்பதற்காக வேண்டி தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். இந்த நிலையில் சொக்க வைக்கும் அழகில் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *