பிக் பாஸ் விக்ரமனா இது?…  சன் டிவி சீரியலில் நடித்துள்ளாரா?… பலரும் அறியாத தகவல் உள்ளே….

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ள விக்ரமன் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் ஒன்றில் நடித்துள்ளதாக தற்பொழுது இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சி தற்பொழுது எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக சென்று கொண்டுள்ளது. 21 போட்டியாளர்கள் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது தற்போது 5 போட்டியாளர்கள் வெளியேற 16 போட்டியாளர்களுடன் பரபரப்பாக நடந்து கொண்டுள்ளது.

விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் ,சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தான் விக்ரமன். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களை பல்வேறு வகையில் நிரூபித்து வருகின்றனர். இதில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருபவர் விக்ரமன்.

இவரைப் பற்றி ஏற்கனவே சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியது. அதாவது இவர் விஜய் டிவியில் 2016 ஒளிபரப்பான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார். காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த நாடகம் டி ஆர் பி ரேட்டிங்கில் மிகப்பெரிய அடியை வாங்கியதால் இந்த நாடகத்தை 29 எபிசோடு உடன் முடித்து விட்டனர்.

இதை தொடர்ந்து தற்பொழுது விக்ரமன் விஜய் டிவியில் மட்டுமல்ல சன் டிவியிலும் நடித்துள்ளார் என்ற சூப்பரான ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவர் 2016 இல் வெளியான’ EMI  தவணை முறை வாழ்க்கை’ என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இத்தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இவர் நடித்த இரண்டு தொடர்களுமே பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *