அரண்மனை போல ஜொலிக்கும் பிக் பாஸ் வீடு…. அசத்தும் போட்டியாளர்கள்… ரசிகர்களை கவர்ந்த ப்ரோமோ இதோ…..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும், பஞ்சமில்லாத இந்த வீட்டில் தொடர்ந்து பல காதல் கதைகளும் நடந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் தற்பொழுது ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவிடம் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இந்த வாரம் ‘மன்னர் ஆட்சி டாஸ்க்’ கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு தகுந்தது போல் வேடம் அணிந்து அசத்தியுள்ளனர்.

அதன்படி பிக் பாஸ் வீட்டை ராயல் மியூசியம் ஆக மாற்றி உள்ளனர். இதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும் ராணியாக ரக்ஷிதாவும் படைத்தளபதி அஸீமுடன் இணைந்து  வீட்டிற்குள் வருகின்றனர். அங்கே தங்களுடைய பொருள்கள் ஒழுங்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிடுகின்றனர்.

இதை தொடர்ந்து ராணி ரக்ஷிதா சாப்பிடும் போது ‘சாப்பாட்டில் உப்பை தவிர வேறு எதுவும் இல்லை’ என்று கோபப்படுகிறார். தற்பொழுது இன்றைய நாளின் முதல் ப்ரோமோ இவ்வாறு  வெளியாகியுள்ளது.

வைரலாகும் ப்ரோமோ இதோ…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *