அட இவர்தான் விவாகரத்தான நடிகை பானுப்பிரியாவின் முன்னாள் கணவரா?… பலரும் பார்த்திடாத UNSEEN புகைப்படம் உள்ளே….

நடிகை பானுப்பிரியா தனது முன்னாள் கணவருடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

80களில் வலம் வந்த ஹீரோயின்கள் அனைவருமே தனக்கென ஒரு தனி இடத்தைக்  கொண்டவர்கள். அழகிலும் நடிப்பிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அப்படி 80களில் இளைஞர்கள் இதயத்தை சுண்டி இழுத்த இடுப்பபழகிதான் பானுப்பிரியா. இவருடைய கவர்ச்சியான கண்களையும், இடுப்பையும் பார்த்து மயங்காத வாலிபர்களே அப்போது இல்லை எனலாம்.

பானுப்பிரியா குச்சிப்புடி, பரதம் போன்ற கலைகளை கற்றவர். தமிழில் நடிகை பானுப்ரியா ‘மெல்ல பேசுங்கள்’ எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இவர் நடிகர் பாக்கியராஜ் உடன் இணைந்து நடித்த ‘ஆராரோ ஆரிராரோ’ படம் தான் இவருக்கு முதல் வெற்றி படமாக அமைந்தது. இவர் சுமார் 80 தெலுங்கு படங்களிலும், 35 தமிழ் படங்களிலும் மேல் நடித்து அசத்தியுள்ளார்.

பானுப்பிரியா 1998ல் ஆதர்ஷ்  என்னும் அமெரிக்க மாப்பிள்ளையை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். பிறகு 2005 இல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். விவாகரத்து பெற்ற இவர் தனது 14 வயது மகளுடன் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

தற்பொழுதும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நடித்துக் கொண்டு வரும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் பெரும்பாலும் நடித்துக் கொண்டு வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘மகளிர் மட்டும்’ படத்தில் ஜோதிகாவுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை பானுப்பிரியா தனது முன்னாள் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *