40 வயதிலும் கொள்ளை கொள்ளும் அழகில் ஜொலிக்கும் ‘தாஜ்மஹால்’ பட நடிகை…. என்ன அழகு!…புகைப்படம் உள்ளே…

‘தாஜ்மஹால்’ திரைப்பட நடிகையான ரியா சென்னின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘தாஜ்மஹால்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரியா சென். இதைத்தொடர்ந்து நடிகர் பிரசாந்துடன் ‘குட்லக்’ திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் ஒரு ரவுண்டு வரலாம் என கனவுடன் சென்ற இவருக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்தது.

இவர் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம், இங்கிலீஷ் என பல மொழிகளில் நடித்து கலக்கியிருந்தார். குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் மாடலிங்கில் இறங்கி பின்னர் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.

2003இல் தொடங்கிய இவரது  திரை பயணம் 2017 வரை தொடர்ந்தது. இதை தொடர்ந்து அவர் சிவான் தவாரி என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஈடுபட்டார். திருமணத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்காத இவர், தற்பொழுது சினிமாவில் ஒரு சூப்பர் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்தனை வருடங்களாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த இவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *