கருப்பு நிற குட்டை கவுனில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்… ரசிகர்களை சுண்டி இழுத்த வீடியோ இதோ…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பாரிஸில் கருப்பு நிற குட்டை கவுனில் தேவதையாக ஜொலிக்கும் வீடியோ ஒன்றை தற்போது தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்களை மனதை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சன் தொலைக்காட்சியில் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில்  தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து கலைஞர்  தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ‘நீதானா அவன்’ என்ற படத்தில் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.

இதை தொடர்ந்து அவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றா.ர் இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது.

தற்பொழுது தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனித்துவமான கதாபாத்திரங்களில் நடைபெறும் ஐஸ்வர்யா ராஜேசுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்த க|பெ ரணசிங்கம் திரைப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று தந்தது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.இந்நிலையில் பாரிசுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு எடுத்த கலக்கல் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதில் அவர் கருப்பு நிற குட்டை கவுனில் அழகாக போஸ் கொடுத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

வைரலாகும் வீடியோ இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *