வாவ்….! ஜெல்லி பால்ஸில் துப்பாக்கியா?…. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…. செம வைரலாகும் வீடியோ…!!!

ஜெல்லி பால்ஸை தண்ணீரில் போட்டு ஊற வைத்து அது பெரிதாக்கிய பிறகு அதை ஒரு துப்பாக்கியில் வைத்து சுடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. ஜெல்லி பால்ஸ் என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு விளையாட்டு பொருள். 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்போது வரைக்கும் இது ஃபேமஸ் ஆக உள்ளது.

இதனை கடைகளில் இருந்து வாங்கி ஒரு டப்பாவில் தண்ணீர் ஊற்றி அதை போட்டு ஊற வைத்து பெரிதான பிறகு அதை உடைத்து விளையாடுவது என்பது அனைவருக்கும் பிடிக்கும். ஒரு சில வீடுகளில் அழகு பொருளாகவும் அதனை அலங்கரித்து வைத்துள்ளார்கள். குழந்தைகளுக்கு இதை வைத்து விளையாடுவதில் ஒரு வித மகிழ்ச்சி, இதனால் பெற்றோர்களிடம் அடம் பிடித்து இதனை வாங்கி மகிழ்வது வழக்கம்.

அந்த வகையில் தான் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் முதலில் ஒரு டப்பாவில் இருந்து தண்ணீரை வடிக்கிறார் ஒரு நபர், பின்னர் அந்த டப்பாவை திறந்து பார்த்தால் உள்ளே பல ஜெல்லி பால்ஸ் குட்டி குட்டியாக உள்ளது. பின்னர் ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்குள் அதை நிரப்பி அதனை ஒரு விளையாட்டு துப்பாக்கியில் மாட்டி அதை சுடுகிறார். அது அழகாக வெளியே வருகின்றது.

இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இதை பார்த்து பல குழந்தைகளும் இது போல் வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த பலரும் கமெண்ட் பக்கங்களில் இந்த துப்பாக்கி எவ்வளவு என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Jubie Toys (@jubietoys)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *