பிக் பாஸ் ADKவின் வயசு என்னென்ன தெரியுமா உங்களுக்கு?… உங்களுக்கு இத்தனை வயசா?…  வாயைப் பிளந்த ரசிகர்கள்…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களிள் ஒருவரான ADK  தனது வயது பற்றி அவரே கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்பொழுது பரபரப்பாகவும் ,விறுவிறுப்பாகவும் நடந்து கொண்டுள்ளது. 38 நாட்களைக் கடந்த இந்நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் ADK.

சென்ற வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் ‘பேக்கரி டாஸ்க்’ கொடுக்கப்பட்டது. அதிகம் யார் ஸ்வீட் செய்து சம்பாதிக்கிறார்கள் என்று போட்டியுடன் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டைகள் வெடித்தது.

இதை தொடர்ந்து இந்த வாரம் ‘அரண்மனை டாஸ்க்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில்  ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரக்ஷிதாவும், மந்திரியாக விக்ரமனும், படைத்தளபதியாக அஸிமும் செயல்படுகின்றனர். இந்த டாஸ்க் தொடங்கிய நாளிலிருந்தே சண்டையும் ஆரம்பித்து விட்டது.

அசிம் எப்பொழுதும் போல பிக் பாஸ் வீட்டிற்குள் தனது சண்டையை ஆரம்பித்து விட்டார். அஸீமிற்கும் ADK விற்கும் நடந்த சண்டையில் கோபம் அடைந்த ADK விக்ரமனிடம் சென்று ‘அசிம் சின்ன பையன் இப்போதான் 30 வயசு இருக்கும். எனக்கு எத்தனை வயசு தெரியுமா? 41 வயசு ஆகுது. வயசு வித்தியாசம் பாக்காம யார் கிட்ட வேணாலும் எது வேணாலும் கதைத்து விடுவாரா?’ என்று கூறி கோபமாக பேசி உள்ளார்.

தற்பொழுது  இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ‘பிக் பாஸ் ADK விற்கு இத்தனை வயசா? பார்த்தா அப்படி தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *