மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளுடைய பாத்ரூமுக்கு தாழ்ப்பாளே இல்லையா?… ரகசிய காரணத்தை கூறிய ஜான்வி கபூர்….

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சென்னையில் உள்ள தனது அம்மாவின் ஆடம்பர பங்களாவை சுற்றிக்காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இன்றளவும் தமிழ் மக்களின் இதயங்களில் நிலைத்து நிற்பவர். இவரது இறப்பு தமிழ் மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது எனலாம். அந்த அளவிற்கு மக்கள் மனதை கொள்ளையடித்திருந்தார் நடிகை ஸ்ரீதேவி.

இவர் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்விகபூர் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக உருவெடுத்துள்ளார். பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் ஜான்வி கபூர்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர். இவர் தற்பொழுது சென்னையில் உள்ள தனது அம்மாவின் ஆடம்பர பங்களாவை சுற்றிக்காட்டும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவர் வீட்டு வாசலில் இருந்து தொடங்கி தனது தந்தை போனி கபூரின் அலுவலகம் செயல்படும் இடத்தையும் காட்டுகிறார்.

இதைத் தொடர்ந்து தனது தாய் திருமணமான பிறகு இந்த வீட்டை வாங்கியதாக கூறும் அவர் தன்னுடைய தாயின் நினைவாக தந்தை இந்த இல்லத்தை புதுப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். நடிகை ஸ்ரீதேவி ஓவியக் கலையில் ஆர்வம் கொண்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நடிகை ஸ்ரீதேவி வரைந்த அழகான ஓவியத்தையும் ஜான்வி இந்த வீடியோவில் காட்டியுள்ளார்.

மேலும் இந்த வீட்டில் தங்களது குடும்பப் புகைப்படங்கள் பல இடம்பெற்றுள்ளதாகவும், கூறிய அவர் தாய் ஸ்ரீதேவியின் ஐடியா என்றும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மாடியில் உள்ள தனது பொழுதுபோக்கு அறையை சுற்றி காட்டுகிறார். இதை தொடர்ந்து மொட்டை மாடிக்கு செல்லும் ஜானகி அங்குள்ள தனது ஜிம்மை காட்டி இதுதான் தனது சரணாலயம் என்று கூறியுள்ளார்.

பின்னர் அவரும் அவரது சகோதரியும் வரைந்த அழகான ஓவியங்களை காட்டுகிறார். தங்களுக்கு தங்களது தாயாரால் இந்த ஓவிய ஆர்வம் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக தனக்கு வீட்டில் மிகவும் பிடித்த இடம் இதுதான் என்று கூறி தனது பாத்ரூமில் சுட்டிக்காட்டும் ஜான்வி, தன்னுடைய அறையில் உள்ள பாத்ரூமிற்கு தாழ்ப்பாளே  கிடையாது என்று கூறி நம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

ஏனென்றால் ‘நான் பாத்ரூம் பூட்டிக் கொண்டு ஏதேனும் பசங்களுடன் போன் பேசி விடுவேன் என்று பயந்து எனது அம்மா பாத்ரூமிற்கு தாழ்ப்பாள் வைக்கவில்லை’ என்று ரகசியத்தை தற்போது தெரிவித்துள்ளார். அம்மா இறந்த பிறகு இந்த வீட்டை புதுப்பித்த பிறகும் கூட நான் என்னுடைய பாத்ரூமிற்கு  தாழ்ப்பாள் வைக்கவில்லை என்று தன்னுடைய குடும்ப ரகசியத்தை அழகாக பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *