‘நீங்க கிழித்தது போதும் தளபதி’…. அசீமை கோபத்தில் கத்திய ADK….போர்களமாய் பிக் பாஸ் வீடு… வைரல் ப்ரோமோ இதோ…

விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. 40 நாட்களைக் கடந்த இந்த நிகழ்ச்சியில்  சண்டைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதல் பிரமோவில் ADK மற்றும் அசிம் பயங்கரமாக சண்டை இடுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இதில் ஐந்து போட்டியாளர்கள் வெளியேற தற்பொழுது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். சென்ற வாரம் ‘பேக்கரி டாஸ்க்’ வழங்கப்பட்டு அதில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டனர்.

இந்த வாரம் ‘அரண்மனை டாஸ்க்’ வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய நாளின் முதல் பிரமோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது இன்றைய ராஜா ராணி டாஸ்கில் ADK மற்றும் அசீம் இடையே பயங்கரமாக சண்டை வெடித்துள்ளது. இதில் அசீம் ADK வை பார்த்து ‘மனிதாபிமானம் இல்லாமல் ஒருவர் காலில் பூட்டு போடுவது சரியில்லை’ என கூறுகிறார்.

உடனே  ADK அதற்கு ‘என்ன மனிதாபிமானம் இல்லை நான் என்னுடைய வேலை மட்டும் தான் பார்க்கிறேன்’ என கூறுகிறார். உடனே அசிம் ‘வேலையை பார்த்தால் ஏன் தப்பி ஓடப் போகிறார்’ என கேட்க, ‘கிழித்தது போதும் தளபதி’ என ADK கத்துகிறார். இவ்வாறு மாறி மாறி இருவரும் தங்களுக்குள் பலத்த சண்டை இட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு இன்றைய நாளின் முதல் பிரமோ வெளியாகி உள்ளது.

வைரல் ப்ரோமோ இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *