பிறந்தநாளை கோலகாலமாக கொண்டாடிய நடிகை ரோஜா…. ஆதரவாளர்கள் செய்த பிரம்மாண்ட செயல்… வைரலாகும் புகைப்படம் இதோ….

நடிகையும் ஆந்திர முதலமைச்சருமான ரோஜா தனது பிறந்த நாளை கோலாகலமாக  கொண்டாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், பிரஷாந்த்தின் ஜோடியாக ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை ரோஜா இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலத்தில் எம்எல்ஏவாகவும் பதவி வகித்து வருகிறார்.

தற்பொழுது படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்தி விட்டார் நடிகை ரோஜா. தனது கவனத்தை முழுவதுமாக அரசியலில் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் அவருடைய ஆதரவாளர்கள் கிரேனில் தூக்கி வந்து பிரம்மாண்டமான ரோஜா மலையை நடிகை ரோஜாவிற்கு அறிவித்தனர். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *