நடிகை ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழை பார்த்துள்ளீர்களா?…. இவ்ளோ காஸ்ட்லியா…. எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க…

நடிகை ஹன்சிகா தனது திருமணத்திற்கான அழைப்பிதழை மிகவும் காஸ்ட்லியாக உருவாக்கியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் ரசிகர்களால் ‘குட்டி குஷ்பு’ என கொண்டாடப்படுகிறார்.

ஆனால் நாளுக்கு நாள் உடல் எடை கூடி மிகவும் குண்டான காரணத்தினால் அனைத்து பட வாய்ப்புகளையும் இழந்தார் ஹன்சிகா. தற்பொழுது தனது உடல் எடையை  மொத்தமாக குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். ஆனால் இவருக்கு அழகே அவருடைய கொழுக் மொழுக் தேகம் தான்.

தற்பொழுது நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதற்காக ஜெய்ப்பூர் அரண்மனையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இவர்  தனது நீண்ட நாள் காதலரும் பிசினஸ் பார்ட்னருமான  Sohail Kathuria என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். டிசம்பர் 2ல் தொடங்கி 4ம் தேதி வரை திருமண விழா நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஒரு பிரபல ஒடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அழைப்பிதழை போட்டோ பிரேம் போல உலோகத்தில் அதிக பணம் செலவழித்து உருவாக்கியுள்ளார் நடிகை ஹன்சிகா.

இதோ அந்த திருமண அழைப்பிதழின் வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *