‘அம்மாடி! எவ்ளோ பெரிய வீடு செமையா இருக்கே!’…. நடிகர் மாதவனின் பிரம்மாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா?… வாயை பிளந்த ரசிகர்கள்…

நடிகர் மாதவன் தான் புதிதாக கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு நடிகர் காதல் மன்னனாக தோன்றி இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வருவர். அந்த வகையில் ஜெமினி கணேசன், கமலஹாசன், அஜித், அரவிந்த்சாமி இவர்களைத் தொடர்ந்து பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன்.

இவர் நடிப்பில் வெளியான ‘அலைபாயுதே’ திரைப்படம், அந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரமும் தோற்றமும் பெண்களை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் அவர் தனது முதல் படத்திலேயே தமிழகப் பெண்களின் கனவு நாயகனாக மாறினார். நடிகர் மாதவன் சிரிப்புக்கு மயங்காத இளம் பெண்களே அந்த நாளில் இல்லை எனும் அளவுக்கு அவருடைய வசீகர தோற்றமும் பெண்களை வெகுவாக கவர்ந்தது.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த மற்றொரு ரொமாண்டிக் படம் ‘மின்னலே’ இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக மாறினார். தொடர்ந்து மாதவன் நடித்த டும்டும்டும், பார்த்தாலே பரவசம், ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஆக்சன் ஹீரோவாக ‘ரன்’ திரைப்படத்திலும், கமலஹாசன் உடன் இணைந்து ‘அன்பே சிவம்’ திரைப்படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். இவர் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும், பிலிம் பார் விருதையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடாத நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர் நடிப்பில் வெளியான ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில் நடிகர் மாதவன் ‘ராக்கெட்ரி’ என்ற படத்தை இயக்கி அதில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் மாதவன் தான் புதியதாக கட்டியுள்ள வீட்டின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘வீடு.. அடுத்த கதை எழுத ஆரம்பித்தேன்’ எனவும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் மாதவனின் வீட்டின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அம்மாடியோ எவ்ளோ பெரிய வீடு’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவு இதோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *