சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் முன் நடிகை நயன்தாராவை பார்த்திருக்கீங்களா?…. அப்போதே என்ன அழகு!… வைரல் புகைப்படம் இதோ…

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நடிகை நயன்தாரா நடிக்க வருவதற்கு முன்பு எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் .முதன் முதலில் மலையாள திரை உலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2005 இல் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது கொள்ளை கொள்ளும் அழகால் ரசிகர்களை கட்டி இழுத்தார்.

இப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது. தற்பொழுது இவர் பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் கதைகளை மிக கவனமாக கேட்டு தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டுள்ளார். தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில்  நடித்து வருகிறார்.

முன்னணி நடிகையான இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இந்த ஜோடி திடீரென இருவரும் பெற்றோர் ஆகி விட்டோம் என்று திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தனர்.

இதை தொடர்ந்து இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்தது. பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளில் சிக்கி இந்த ஜோடி தற்பொழுது அனைத்திலிருந்து வெளிவந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

 

நடிகை நயன்தாரா தற்பொழுது ஜாம்பவான், கனெக்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ‘அப்பவே இவ்வளவு அழகா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *