பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர்தானா?… இணையத்தில் கசிந்த தகவல் இதோ…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை போன்று எந்த ஒரு நிகழ்ச்சியும் இவ்வளவு பிரபலம் அடைந்ததில்லை. தற்போது பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத இந்த நிகழ்ச்சி மக்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களுக்கு இடையே அன்பு, சண்டை, காதல், மகிழ்ச்சி, வெறுப்பு என அனைத்தையும் ஒருங்கே காண்பித்து வருகின்றனர். இது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட அரண்மனை டாஸ்க்கில் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடினர்.

இதில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரக்ஷிதா ராஜா ராணி ஆக வேடமிட்டனர். இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களுக்கிடையே கடும் சண்டை நடைபெற்றது. ஒவ்வொரு வாரமும் எவிக்சன் பிக் பாஸ் வீட்டில் நடப்பது வழக்கம். மஹேஸ்வரி, அசல் கோளாறு, ஷாந்தி, ஷெரினா, ஜிபி முத்து இவர்களைத் தொடர்ந்து இந்த வார எலிமினேஷனுக்கு கதிரவன், தனலட்சுமி, அசீம், ராபர்ட், ஆயிஷா மற்றும் நிவாஸினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 வீட்டிலிருந்து தற்போது நிவாஸினி தான்  குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *