‘வில்லன்’ திரைப்படத்தில் சிறுவயது அஜித் ஆக நடித்த twins  இப்ப எப்படி இருக்காங்கன்னு தெரியுமா உங்களுக்கு?…. படத்துக்காக ‘பளார்’ என அடித்த இயக்குனர்… வைரலாகும் தகவல் உள்ளே….

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘வில்லன்’ திரைப்படத்தில் சிறுவயது அஜித்தாக நடித்த இரட்டையர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2002ல் வெளியான திரைப்படம் ‘வில்லன்’. இப்படத்தில் அஜித் குமார் இரு வேடங்களிலும், மீனா மற்றும் கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு வித்தியாசகர் இசையமைத்துள்ளார்.

இப்படம் ‘ஜீத் ‘என்று ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டது.நடிகர் அஜித்திற்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் இப்படம் பெற்றுக் கொடுத்தது. படம் வெளியாகி அந்த ஆண்டின் அதிக வசூலையும் ஈட்டியது. இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்த கேரக்டர்களின் சிறுவயது அஜித்தாக நடித்த தினேஷ் ஷா மற்றும் நரேஷ் ஷா  இருவரின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் சமீபத்தில் அவர்கள் கொடுத்த நேர்காணல் ஒன்றும் வைரலாகி வருகிறது. இந்த நேர்காணலில் கலந்து கொண்ட இவர்கள் தினேஷ் ஷா அஜித் ரசிகர் என்றும், நரேஷ் ஷா  விஜய் ரசிகர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த பல  சுவாரசியமான விஷயங்களையும் பதிவு செய்துள்ளனர்.

படத்தில் வரும் குறிப்பிட்ட எமோஷனல் காட்சியில் நடிக்கும் போது அழுகை வரவில்லை என்று இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அடித்ததாகவும், அதன் பின்னரே அழுகை வந்ததாகவும் தெரிவித்த அவர்கள், அனைத்து காட்சிகளையும் முடிந்த பின்னர் இயக்குனருக்கு ரவிக்குமார் அழைத்து அழுகை வருவதற்காகவே அடித்ததாக  குறிப்பிட்டதாகவும் பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கு அந்த காட்சிகளின் ஆழம் தியேட்டரில் படம் பார்க்கும் பொழுது தான் ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் வைத்து உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அத்தோடு 20 வருஷத்துக்கு முன்னர் நடிகர் அஜித்குமாரை நெருங்கி அருகில் பார்த்த இந்த இரட்டையர்கள் தற்பொழுதும் நடிகர் அஜித் அதே இளமையில் ஹேண்ட்சமாக  இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தற்பொழுது இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *