நடிகர் அல்லு அர்ஜுனின் மகளா இது?…எவ்ளோ கியூட்டா இருக்காங்க…வைரல் வீடியோ இதோ…

நடிகர் அல்லு அர்ஜுன் தனது மகளின் வீடியோவை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். அவரது நடிப்புக்கும் நடனத்துக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

இவர் திரைப்படங்களில்  நடிப்பதோடு பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகாந்தனா நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில்’ புஷ்பா’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைகளத்தை கொண்டிருக்கும். தெலுங்கு நடிகர் ஆன அல்லு அர்ஜுன் தமிழில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அறிமுகமானார்.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி தனது மகளின் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள்  இருக்காங்களா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ இதோ….

 

View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *