‘முடிந்தது திருமணம்… அடுத்தது என்ன ரிசப்ஷன் தான்’… விஜய் டிவி நடிகை ரித்திகாவின் பிரம்மாண்ட ரிசப்ஷன் வீடியோ இதோ….

‘குக் வித் கோமாளி’ பிரபலமான நடிகை ரித்திகாவின் ரிஷப்ஷன் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் கூட பங்கு பெற்று வருகிறார். தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் விஷாலுடன் ஜோடி சேர்ந்து ரித்திகா நடித்துக் கொண்டு வருகிறார். இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு திடீரென ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறினார். இவருக்கும் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்பவருக்கும் கேரளாவில் திருமணம் நடந்துள்ளது.

அண்மையில் இந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு  உள்ளாக்கினார். இதைத்தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறத் தொடங்கினர். தற்பொழுது  திருமணம் முடிந்து விட்டது. அடுத்தது என்ன ரிசப்ஷன் தான். நடிகை ரித்திகாவின் ரிசப்ஷன் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *