“காதல் ரோஜாவே” பாடலுக்கு கீபோர்டில் செம்மையாக டியூன் போட்ட கியூட் குழந்தை… சூப்பரா வாசிக்கிறீங்களே…ஏ ஆர் ரகுமான் பகிர்ந்த வீடியோ இதோ….

‘காதல் ரோஜாவே’பாடலை சிறுமி ஒருவர் தனது கீ போர்டில் வாசிக்கும் வீடியோ ஒன்றை ஏ ஆர் ரகுமான் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இசை புயல் ஏ ஆர் ரகுமான் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009ல் இசையமைத்த ஸ்லிம் டாங்  மில்லியனர் ஹிந்தி திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். 1992 இல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசை துறையில் கால் பதித்தார்.

தன்னுடைய முதல் படத்திலேயே தன்னுடைய முத்திரையையும் பதித்தார். இப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்காக அவர் தேசிய விருதும்  பெற்றார். இதை தொடர்ந்து அவர் இசையமைத்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியது. இந்தியாவின் மிகப் பெரிய விருதான பத்மபூஷன் விருதும் இவருக்கு  வழங்கப்பட்டது.

தன்னுடைய இசையால் உலக திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இவருடைய இசையில் மயங்காதவர் யாரும் இல்லை. இதனால் உலகம் முழுவதும் அவர் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருது பெற்ற ஒரே இசையமைப்பாளர் இசைப்புயல்  ஏ ஆர் ரகுமான் தான்.

தற்பொழுது இவர் இவர் இறுதியாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படமும் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் சில வீடியோக்கள் அவ்வப்போது திடீரென்று வைரலாகிவிடும். அந்த வகையில் தற்பொழுது 3 வயது இருக்கும் குழந்தை ஒன்று ‘காதல் ரோஜாவே’ பாடலை தனது கீ போர்டில் இசையமைத்துள்ளது.

தற்பொழுது இந்த வீடியோவை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்து ஏ ஆர் ரகுமான் அந்த குழந்தைக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்’ இவ்வளவு சூப்பரா வாசிக்கிறீயேம்மா ‘ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *