அட இவர்கள் தான் நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களா?… வைரலாகும் அழகான குடும்ப புகைப்படம் உள்ளே…

நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனின் அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உயரம் முக்கியமில்லை திறமை தான் முக்கியம் என்பதை ஆணித்தனமாக நிரூபித்தவர் தான் நடிகர் மற்றும் இயக்குனரான பாண்டியராஜன். இவரது இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் காமெடி மையப்படுத்தி வந்து செம ஹிட் அடித்தது.

பாண்டியராஜன் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது திருட்டு முளியும், வெள்ளந்தியான பேச்சும் தான். இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர்.

இவர் ‘கன்னி ராசி’ திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து ஆண்பாவம், மனைவி ரெடி, நெத்தியடி, கபடி கபடி போன்ற எண்ணற்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் சினிமாவில் பல கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தியுள்ளார்.

தற்பொழுது குணச்ச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் பாண்டியராஜன் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாண்டியராஜன் 1986ல் வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பல்லவராஜன், பிரித்திவ் ராஜன் , பிரேம்ராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் பாண்டியராஜன் தனது மகன்கள் மற்றும் மருமகளுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த அழகான குடும்ப புகைப்படம்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *